Friday, January 30, 2026 6:13 am
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்து போடவில்லை எனில், மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்திருக்கிறார். இந்நிலையில், ஈரானுடன் இணைந்து சீனாவும் ,ரஷ்யாவும் கடற்படை கூட்டு பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறது. இந்த பயிற்சி, அமெரிக்காவுக்கு பதிலடியாக இருக்கும்.
கடந்த 7 ஆண்டுகளாக இந்த பயிற்சியை மூன்று நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. தற்போது 8வது ஆண்டாக பயிற்சி நடைபெற இருக்கிறது. இந்திய பெருங்கடல் இந்திய பெருங்கடல் மற்றும் ஓமன் கடலில் இந்த பயிற்சி நடைபெறும்.
ஓமன் கடல் , ஹார்முஸ் ஜலசந்தி சாகியவற்றின் வழியாகத்தான் உலகின் பெரும்பகுதி கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பது இந்த நாடுகளின் முக்கியமான வியூகமாகும். இந்த பயிற்சியில் சீனாவின் தங்ஷான் போர்க்கப்பல் பங்கு பெறுகிறது. இது ஆபிரகாம் லிங்கன் அளவுக்கு சக்தி வாய்ந்தது கிடையாது.
இருப்பினும் இது சீனக் கடற்படையின் மிகவும் நவீனமான அழிப்பான் கப்பலாகும். இதில் அதிநவீன ரேடர் அமைப்புகள் மற்றும் வான்வழி இலக்குகளையும், கப்பல்களையும் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உள்ளன. இதனை சீனாவின் ஏஜிஸ் என்று ராணுவ வல்லுநர்கள் அழைக்கிறார்கள்.
ஈரான் சார்பில் ஐரிஸ் மக்ரான் ரக போர்க்கப்பல் பயிற்சியில் பங்கேற்கிறது. இது ஈரானிய கடற்படையின் மிகப்பெரிய கப்பலாகும். ஒரு எண்ணெய் டாங்கர் கப்பலை உருமாற்றிப் போர்க்கப்பலாக மாற்றியுள்ளனர். இதில் ஒரே நேரத்தில் பல ஹெலிகொப்டர்கள் தரையிறங்க முடியும். இது சிறிய ரக ஏவுகணைப் படகுகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இது கடலில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து மற்ற கப்பல்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும்.
ரஷ்யா சார்பில் கோர்வெட் ஸ்டோய்கி கப்பல் பயிற்சியில் பங்கேற்கிறது. இது அளவில் சிறியதாக இருந்தாலும், எதிரிக் கப்பல்களைத் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து அழிக்கும் கருவிகளைக் கொண்டது. இது மூன்றும் சேர்ந்தால் ஆபிரகாம் லிங்கனை தோற்கடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

