Wednesday, January 28, 2026 4:11 pm
இலங்கையின் சுதந்திர தினத்தை எதிர்த்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெறவுள்ள “கரிநாள் பேரணி” தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு ஊரணி பகுதியில் உள்ள பரியோவான் ஆலய மண்டபத்தில் இன்று காலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மதகுருமார், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவு சங்கத்தின் பிரதிநிதிகள், பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


