Wednesday, January 28, 2026 3:56 pm
தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கெயான் ஹீ, சர்ச்சைக்குரிய ‘Unification Church’ அமைப்பிலிருந்து கையூட்டல் பெற்ற குற்றத்திற்காக 20 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையான காலப்பகுதியில், அரசியல் மற்றும் வணிகச் சலுகைகளுக்காக குறித்த மத அமைப்பிடமிருந்து வைரம் மற்றும் ‘Chanel’ கைப்பைகள் உள்ளிட்ட 80 மில்லியன் வொன் பெறுமதியான பொருட்களை கையூட்டலாக பெற்றதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை மோசடி மற்றும் தேர்தல் தொடர்பான ஏனைய குற்றச்சாட்டுகளிலிருந்து 52 வயதான கிம் கெயான் ஹீயை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
20 மாத சிறைத்தண்டனையுடன், 12.85 மில்லியன் வொன் பணத்தை மீளச் செலுத்தவும், வைர நெக்லஸை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிம் கெயான் ஹீயின் கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான யூன் சுக் இயோல், ஏற்கனவே இராணுவச் சட்டத்தைக் கொண்டுவர முயன்ற குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
தென்கொரிய வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி தம்பதி ஒரே நேரத்தில் சிறைத்தண்டனை பெறுவது இதுவே முதல் முறையாகும்.

