Wednesday, January 28, 2026 3:53 pm
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனைவியுடன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் அரச சொத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்குத் தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் சுகயீனம் காரணமாக பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

