Tuesday, January 27, 2026 1:27 pm
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைக்கவசம் அணிந்திருந்த நபரொருவர் ஆசிரியரை கத்தியால் குத்தும் காட்சிகள் வீதியில் உள்ள சி.சி.ரிவியில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த ஆசிரியர் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

