Tuesday, January 27, 2026 9:44 am
ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் ஊர்காவற்துறை பொது சுகாதார பரிசோதகர் ரா. சானுஜன் மற்றும் வேலணை பொது சுகாதார பரிசோதகர் சீ. வி. கிசோக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினரால் கடைகள் கடந்த 22ம் திகதி திகதி பரிசோதனை செய்யப்பட்டது.
இதன்போது இருகடைகளில் களஞ்சியபடுத்தப்பட்ட காலாவதியான மற்றும் மனித பாவனைக்கு உதவாத பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து இரு கடை உரிமையாளர்களிற்கும் எதிராக தனித்தனியாக 34 குற்றச்சாட்டுக்கள், 13 குற்றச்சாட்டுகளுடன் நேற்று ஊர்காவற்துறை பொது சுகாதார பரிசோதகரினால் ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்குகளினை விசாரித்த ஊர்காவற்துறை நீதவான் இரு கடை உரிமையாளர்களையும் குற்றவாளிகளாக இனங்கண்டு முறையே 170,000, 65,000 தண்டம் விதிக்கப்பட்டது.
அத்துடன் சுகாதார குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு பொது சுகாதார பரிசோதகரின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை இரு கடைகளையும் சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை இட்டார்.
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகரினால் இரு கடைகளும் சீல் வைத்து மூடப்பட்டது.


