Sunday, November 9, 2025 10:07 am
ராஜகிரிய – வெலிக்கடைப் பகுதியில், இணையத்தளமொன்றுக்கு ஆபாச காணொளிகளை பதிவு செய்து வழங்கி வந்த ஒரு தம்பதி நுகேகொடை வலய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான கணவர் தனியார் பல்கலைக்கழகமொன்றில் கணினிப் பொறியியல் பட்டம் பெற்றவர் என்றும்,மனைவி உளவியல் ஆலோசனை டிப்ளோமா பெற்றவர் என்றும் விசாரணையில்
தெரியவந்துள்ளது.
இந்த தம்பதியினர்,நிதி நெருக்கடி காரணமாக பிரித்தானியாவை மையமாகக் கொண்ட வலைத்தளத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டு, மாதத்துக்கு 8 காணொளிகளை வழங்கி வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அவர்களுக்கு மாதமொன்றுக்கு சுமார் ரூபா 1.5 இலட்சம் தொடக்கம் 2 இலட்சம் வரை வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் மொத்தம் 334 ஆபாச காணொளிகளை பதிவேற்றியுள்ளதாகக் பொலிஸ் உறுதி செய்துள்
ளது.இந்த காணொலிகளை அவர்கள் தமது மூன்று மாடிக் கட்டடத்தின் மேல் மாடியில் உள்ள, குடியிருப்பிலிருந்தே பதிவு செய்துள்ளனர்.
கைதான தம்பதி இன்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

