Thursday, November 5, 2026 7:54 pm
ஸ்ரீ லங்கா போக்குவரத்துச் சபையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 7,130 பஸ்களில், சுமார் 5,000 பேருந்துகள் மட்டுமே தற்போது சேவைக்கு உகந்த நிலையில் உள்ளன என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேன இன்று வியாழக்கிழமை ( 5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டாக்டர் குணசேன, 6,987 சாதாரண பஸ்களும் 143 சொகுசு பஸ்களும் உள்ளபோதிலும், 2,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளன என்றார்.

