Wednesday, June 3, 2026 8:00 pm
பிரபலமான முன்னணி நடிகர் அமீர்கான் 61வது வயதில் தனது காதலியான கவுரி ஸ்ப்ராட்டை ஜூலை 5ம் திகதி திருமணம் செய்ய உள்ளார். அமீர்கான் இரண்டு திருமணங்கள் செய்திருந்தார். இரண்டு மனைவிகளையும் விவகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்.
அமீர்கான் 1986ல் ரீனா தத்தா என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஜூனைத் கான் என்ற மகனும், ஐரா கான் என்ற மகளும் உள்ளனர். 2002ல் ரீனாவை பிரிந்த அமீர்கான் 3 ஆண்டுகள் கழித்து 2005ல் கிரண் ராவ்வை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். அமீர்கான் – கிரண் ராவ் தம்பதி 16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். அதன்பிறகு 2021ல் கிரண் ராவ்வையும், அமீர்கான் விவாகரத்து செய்தார்.
அமீர் கான் தனது காதலியான கவுரி ஸ்ப்ராட்டை ஜூலை 5ம் தேதி திருமணம் செய்ய உள்ளார். அமீர்கான் தனது நீண்டகால காதலியை கரம்பிடிக்க உள்ளார். அமீர்கான் காதலியின் பெயர் கவுரி ஸ்ப்ராட். இவருக்கு வயது 47. இவர்கள் இருவரும் சில நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்ற நிலையில் கிசுகிசுக்கள் வெளியாகின. இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

