Wednesday, June 3, 2026 8:06 pm
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில், காலியாக உள்ள மாநிலங்களவை இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இந்த முடிவு, தவெக–காங்கிரஸ் கூட்டணியின் உறவை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக அரசியல் வட்டாரங்களில் மதிப்பிடப்படுகிறது.
தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி.சண்முகம், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது மாநிலங்களவை பதவியை இராஜினாமா செய்ததால் அந்த இடம் காலியானது. இதற்கான இடைத்தேர்தல் ஜூன் 18, 2026 அன்று நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் ஜூன் 1 முதல் 8 வரை நடைபெறுகிறது.
சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவுக்கு இந்த மாநிலங்களவை இடத்தை வெல்ல தேவையான உறுப்பினர்கள் இருப்பதால், அந்த இடத்தை தங்கள் கட்சிக்காக வைத்துக்கொள்ளலாமா அல்லது கூட்டணிக் கட்சிக்கு வழங்கலாமா என்ற விவாதம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்தது. இந்த நிலையில் காங்கிரஸுக்கு அந்த வாய்ப்பை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

