Thursday, September 24, 2026 6:17 pm
2027-ஆம் ஆண்டிற்குள் அனைத்து முன்பள்ளிகளுக்கும் பொதுவான தரநிலைகளை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள், பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சரவை ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. செப்டம்பர் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய இக்குழு, முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுவான பயிற்சி மற்றும் சான்றிதழ் முறையை உருவாக்குவது குறித்தும் விவாதித்தது.
முன்பள்ளிகளில் தற்போதுள்ள உட்கட்டமைப்பு குறைபாடுகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டதுடன், முன்பள்ளி கல்வியை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

