Friday, May 29, 2026 7:50 pm
ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது எலிமினேட்டர் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற ஹைதராபாத் அணியின் கப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 16 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், ஹைதராபாத் பந்துவீச்சை விளாசித் தள்ளினார். சூர்யவன்ஷி 29 பந்துகளில் 12 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 97 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இந்த இன்னிங்ஸின் மூலம், ஐபிஎல் சீசன் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் 65 சிக்ஸர்கள் அடித்த சூர்யவன்ஷி ,கிறிஸ் கெய்லின் (59 சிக்ஸர்கள்) 14 ஆண்டுகால சாதனையை முறியடித்து சூர்யவன்ஷி புதிய சாதனை படைத்தார். அவரைத் தொடர்ந்து துருவ் ஜூரெல் அதிரடியாக 21 பந்துகளில் அரைசதம் கடந்து அணிக்கு பலம் சேர்த்தார். இறுதி ஓவர்களில் ஹைதராபாத் அணி விக்கெட்டுகளை வீழ்த்தி கட்டுப்படுத்திய போதிலும், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
244 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு, ராஜஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். அபிஷேக் சர்மாவை வீழ்த்திய அவர், 11 பந்துகளில் 33 ஓட்டங்கள் அடித்த இஷான் கிஷானையும் வெளியே அனுப்பினார். 19.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 196 ஓட்டங்கள் எடுத்தது.
வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்த இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது

