Friday, May 1, 2026 9:36 am
வான்கூவரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உதைபந்தாட்டத் தலைவர்களின் கூட்டத்தில் ஈரான் பிரதிநிதிகள் கலந்துகொள்ளாததால், வரவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டியில் ஈரானின் பங்கேற்பு கேள்விக்குறியாகியுள்ளது.
பீபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ தலைமையில் நடைபெற்ற ஆசியாவின் முன்னணி உதைப்ந்தாட்ட தலைவர்களின் கூட்டத்தில் அந்தத் தலைப்பு விவாதிக்கப்படவில்லை. மேலும், வட அமெரிக்க மைதானங்களில் அமெரிக்கா நடத்தும் இந்த கோடைகால உலகக் கிண்ணப் போட்டியில் “பெருமையுடன்” பங்கேற்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக ஈரானின் விளையாட்டுத்துறை அமைச்சர் கடந்த வாரம் அறிவித்தார்.
ஆயினும், ஈரானியக் குழுவும் அதன் அதிகாரிகளும் இன்னும் விஸா சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்; செவ்வாய்க்கிழமை கூட்டத்தில் அவர்கள் கலந்துகொள்ளாதது இந்த உண்மையை மேலும் உறுதிப்படுத்துகிறது.
‘ஜி’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஈரான், லாஸ் ஏஞ்சல்ஸில் நியூசிலாந்து (ஜூன் 15) , பெல்ஜியம் (ஜூன் 21) அணிகளுடனும், சியாட்டிலில் (ஜூன் 26) எகிப்து அணியுடனும் விளையாட உள்ளது.

