Saturday, August 1, 2026 7:45 am
உலகக் கிண்ண உதைப்ந்தாட்டத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் விதிமீறல்கள் தொடர்பாக அர்ஜென்டினா உதைபந்தாட்டச் சங்கத்தின் மீதும்,, ஆர்ஜென்ரீனா வீரர்கள் மீதும் பீபா ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக உலக உதைப்ந்தாட்ட நிர்வாக அமைப்பு புதன்கிழமை அறிவித்தது.
போட்லண்ட் தீவுகளின் மீதான இறையாண்மையை வலியுறுத்தும் பதாகையை ஏந்தி நின்றது உட்பட, உலகக் கிண்ணப் போட்டியின் போது நடந்ததாகக் கூறப்படும் பல விதிமீறல்களுக்காக ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
விதிமீறல்களில் ஆதரவாளர்களின் பாகுபாடு நிறைந்த கோஷங்கள் ,சைகைகள், தாமதமான ஆட்டத் தொடக்கம், போட்டி ,பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறுதல், அணி ,பார்வையாளர்களால் பொருத்தமற்ற செய்திகளைக் காண்பித்தல், ,பார்வையாளர் அரங்குகளில் இருந்து பொருட்களை வீசுதல் ஆகியவை அடங்கும்.
விளையாட்டு சாராத ஆர்ப்பாட்டங்கள், அணியின் முறைகேடு, பாகுபாடு , இனவெறித் துஷ்பிரயோகம், அத்துடன் போட்டிகளில் ஒழுங்கு , பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆர்ஜென்ரீனா எதிர்கொள்ளக்கூடும் என்று பீபா கூறியது.
ஸ்பெயின், அர்ஜென்டினா ஆகியவற்றுக்கிடையேயான உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பிறகு நடந்த சம்பவங்கள் தொடர்பாக, ஆர்ஜென்ரீனாவீரர்கள் லியாண்ட்ரோ பரேடெஸ், நஹுயல் மோலினா , தியாகோ அல்மடா, அணி அதிகாரி ராபர்டோ அயலா ,ஸ்பெயின் வீரர் காவி ஆகியோருக்கு எதிராகத் தனித்தனி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஜூலை 19 அன்று நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின், ஆர்ஜென்ரீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. அதனைத் தொடர்ந்து, பல ஆர்ஜென்ரீனா வீரர்களும் பணியாளர்களும் ஸ்பெயின் சகாக்களுடன் மோதல்களில் ஈடுபட்டனர்.
விளையாட்டுக்கு எதிரான நடத்தை குற்றச்சாட்டுகள் தொடர்பாக மோலினா, அல்மடா மற்றும் காவி ஆகியோருக்கு எதிராகவும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

