Saturday, April 18, 2026 8:53 am
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று தமிழகத்திற்கு தேர்தல் பிராசாரம் மேற்கொள்ள உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் திகதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் அனல் பறக்க தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதல்வர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜய் உள்ளிட்ட தலைவர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக கூட்டணியை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்கு பிரசாரம் செய்யாமல் இருந்தார். ராகுல் காந்தி அப்செட்டில் இருப்பதால்தான் பிரசாரம் செய்யவரவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. எனினும் டெல்லியில் நாடாளுமன்ற கூட்டம் உள்ளிட்ட பணிகளில் பிசியாக இருப்பதால்தான் ராகுல் காந்தி பிரசாரத்திற்கு வரவில்லை என்றும், அந்த பணிகள் முடிந்ததும் ராகுல் காந்தி வருவார் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வந்தனர். இந்த நிலையில், ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி,சோளிங்கர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களையும், திருச்சி துறையூர் தொகுதியில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்
திருச்சியில் இருந்து மாலை 5.40 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு டெல்லி செல்ல உள்ளார்.

