Tuesday, April 28, 2026 9:25 am
மினாபில் உள்ள ஈரானிய தொடக்கப் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 73 சிறுவர்களும் 47 சிறுமிகளும் கொல்லப்பட்டதாக அரசு ஒளிபரப்பு நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி , உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் முழுவதும் தாக்குதல்களைத் தொடங்கிய அதே நாளில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள இலக்குகளை தெஹ்ரான் தாக்கியது.
26 ஆசிரியர்கள், ஏழு பெற்றோர்கள், ஒரு பள்ளிப் பஸ் சாரதி , பாடசாலைக்கு அருகிலுள்ள மருந்து விற்பனை நிலையத்தில் பணி புரிந்த தொழில்நுட்ப வல்லுநர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக ஐ.ஆர்.ஐ.பி தெரிவித்துள்ளது.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட அமெரிக்க இராணுவ விசாரணையின் முதற்கட்ட தகவலின் படி , இலக்கு தவறுதல் காரணமாக ஒரு அமெரிக்க டோமஹாக் குரூஸ் ஏவுகணை தொடக்கப் பள்ளியைத் தாக்கியுள்ளது.

