Monday, June 22, 2026 8:52 pm
இஸ்லாமாபாத்தின் மத்தியஸ்தத்தில் சுவிட்ஸர்லாந்தில் அமெரிக்காவுக்கும்,ஈரானுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்வார் என அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மத்தியஸ்தம் செய்ததற்காக” பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபைப் பாராட்டுவது இந்தப் பயணத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்” என்று ஜனாதிபதி அலுவலகத்தின் மக்கள் தொடர்பு இயக்குனர் ஹபிபொல்லா அப்பாஸி கூறியதாக இர்னா அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

