Thursday, September 24, 2026 5:57 pm
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டுச் செல்வது தொடர்பான விவகாரத்தில், தொழில்நுட்பக் குழுவொன்று இறுதி முடிவை எடுக்கும் என்று பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சரவை ஆலோசனைக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் செப்டம்பர் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள பெண்களின் குழந்தைகளின் கல்விச் செலவுகளைத் திரும்பப் பெறுவதற்கான (reimburse) திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்தும் இக்குழு விவாதித்தது.

