Saturday, April 18, 2026 9:10 pm
ஹோர்முஸ் ஜலசந்தியில், அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்று கொள்கலன் கப்பல் மீது தாக்கியதில் சேதம் ஏற்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு சனிக்கிழமை விடுத்த எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
ஓமானுக்கு வடகிழக்கே 25 கடல் மைல் தொலைவில் சரக்குக் கப்பல் மீது எறிபொருள் தாக்கியதில், “சில கொள்கலன்கள் சேதமடைந்தன; தீ விபத்தோ அல்லது சுற்றுச்சூழல் பாதிப்போ ஏற்படவில்லை” என அந்த எச்சரிக்கை தெரிவித்தது.
முன்னதாக, ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு ‘துப்பாக்கிப் படகுகளால்’ ஒரு எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக UKMTO தெரிவித்திருந்தது.
“ஹோர்முஸ் ஜலசந்தி அதன் முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது” என்று ஈரானிய ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

