Saturday, May 23, 2026 4:34 pm
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையின் அடுத்த இலக்காக திமுகவின் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாறப்போகிறார் என்ற தகவல் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது உள்ள வழக்கை அடிப்படையாக கொண்டு, அவரிடம் முழுமையான விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு தற்போது அதிகாரப்பூர்வமாக ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.
மாநிலத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில், மாநில அரசின் ஒப்புதல் அவசியமாகும். இதனால், தற்போதைய புதிய தவெக அரசின் முதலமைச்சரான விஜய் இந்த கடிதத்திற்கு ஒப்புதல் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
கடந்த காலத் திராவிட ஆட்சிகளை போல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முட்டுக்கொடுக்காமல், ‘ஊழலற்ற தூய்மையான நிர்வாகம்’ என்ற தவெகவின் கொள்கைப்படி முதலமைச்சர் விஜய் இந்த விசாரணைக்கு உடனடியாக பச்சைக்கொடி காட்டுவார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

