Friday, July 10, 2026 10:41 am
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் நேற்றைய தினம் (09) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ‘பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்’ எனும் அமைப்பே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் , ‘பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை கேளுங்கள்’ , ‘அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்’ , ‘பல்கலைக்கழகங்களில் பெண்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்’ , ‘ குற்றத்தை மறைக்க சட்டத்தை ஆயுதமாக்காதே’ , ‘ கண்ணியத்தை இழந்து கல்வியை பெறும் இடமா யாழ் பல்கலைக்கழகம் ‘ , ‘தமிழர் பண்பாட்டிற்கு உணர்ச்சி கொள்ளும் பல்கலைக்கழகமே பாலியல் சுரண்டல்களுக்கு மௌனம் ஏன் ? ‘ போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

