Monday, October 5, 2026 8:47 am
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை அந்நாட்டிற்கு திரும்ப அனுப்புவது தொடர்பான அந்த நாட்டின் கோரிக்கை சட்டரீதியாக ஆய்வு செய்யப்பட்டு வருவதால், இதற்கு துல்லியமான காலக்கெடு எதையும் வழங்க முடியாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
டாக்காவில் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய
பங்களாதேஷுக்கான இந்திய உயர்ஆணையர் தினேஷ் திரிவேதி, ஹசீனா
பங்களாதேஷ் விமானப்படை விமானம் மூலமே இந்தியா வந்தடைந்தார் என்பதையும், அண்டை நாடு என்ற முறையில் அவருக்கு தஞ்சம் அளிப்பதை தவிர இந்தியாவுக்கு வேறு வழியிருக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.
2024-இல் ஆட்சி வீழ்ந்த பிறகு இந்தியாவில் தங்கியுள்ள ஹசீனாவுக்கு, சிறப்பு நீதிமன்றம் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவரை திரும்ப ஒப்படைக்குமாறு டாக்கா கோரி வருகிறது.
பெப்ரவரி 2026 தேர்தலுக்கு பிறகு தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சி ஆட்சியை பிடித்த பிறகும் இந்த வலியுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இதனிடையே, ஓகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் இருந்து இணையவழியில் பேசிய ஹசீனா, தான் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், ஹசீனா நாட்டுகுத் திரும்பினால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத் தீர்ப்பின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என
பங்களாதேஷ் உள்துறை அமைச்சர் சலாஹுதீன் அகமது தெரிவித்துள்ளார்.

