Sunday, April 19, 2026 6:05 pm
நடிகராக இருந்த அரசியலுக்கு வந்திருக்கும் விஜயின் மனைவி சங்கீதா விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு, நடிகை ஒருவரை விஜய் வீட்டுக்கே கொண்டு வந்து குடும்பம் நடத்துவதாகவும், நடிகையுடனான உறவை முறித்துக்கொள்வதாக கொடுத்த வாக்குறுதியை விஜய் பின்பற்றவில்லை எனவும், தன்னை மோசமாக நடத்தியதாகவும், தன்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை எனவும், பொருளாதார ரீதியாக தன்னை முடக்கியதாகவும் அந்த விவாகரத்து மனுவில் சங்கீதா பல புகார்களை கூறியிருந்தார்.
சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் சங்கீதா தரப்பு வழக்கறிஞர்களுக்கும், விஜய் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது தனக்கு 250 கோடி ,மகன், மகள் இருவருக்கும் தனியாக பணம் கொடுக்க வேண்டும் என சங்கீதா கேட்டதாகவும், அதற்கு விஜய் மறுத்து சங்கீதாவுக்கு 35 கோடி மட்டும் கொடுப்பதாகவும் மகன், மகள் ஆகியோரை தான் பார்த்துக்கொள்வதாகவும் சமாதானம் பேசியதாக சொல்லப்படுகிறது. ஆனால் சங்கீதா தரப்பு அதை ஏற்கவில்லை. எனவே பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

