Friday, October 30, 2026 5:01 pm
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள பணமோசடி வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை, கொழும்பு மேல் நீதிமன்றம் நவம்பர் 12-ஆம் திகதிக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (30) மேல் நீதிமன்ற நீதிபதி உடேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தேஹிவளை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளில் 73 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஐந்து காணித் துண்டுகளை யோஷித ராஜபக்ஷ கொள்வனவு செய்ததாகக் குற்றம் சாட்டி, சட்டமா அதிபரால் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

