Friday, October 30, 2026 4:55 pm
தெற்கு ஸ்பெய்னின் கிரனாடாவில் உள்ள ஒரு வெடிமருந்து தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது இரண்டு பேர் லேசான காயங்களுடன் தப்பினர் என்று பொலிஸை மேற்கோள் காட்டி ஸ்பானிய செய்தி நிறுவனமான EFE செய்தி வெளியிட்டுள்ளது.
எல் ஃபார்கு வெடிமருந்து தொழிற்சாலையில், வெடிமருந்துகளை அப்புறப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட பகுதியில், உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்குச் சற்று முன்னதாக இந்த வெடிவிபத்துநடந்தது. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இருவருக்கு லேசான செவித்திறன் காயங்கள் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேசமயம், பொதுத் தொழிலாளர் சங்கம் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று என்றும், அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

