Saturday, November 21, 2026 9:00 pm
68 வயதான முன்னாள் ஜப்பான் சர்வதேச வீரரான இவர், பீஃபா -வின் உயர்பதவிக்கு போட்டியிடும் முதல் ஜப்பானிய வேட்பாளர் ஆவார். ஜியானி இன்ஃபான்டினோ தனது நான்காவது பதவிக்காலத்தை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், இவர் வலுவான நிர்வாகத்தையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதியளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஐந்து தேசிய கூட்டமைப்புகளின் ஆதரவைப் பெற்ற பிறகு, பீஃபா தலைவர் பதவிக்கான தனது வேட்புமனுவைச் சமர்ப்பித்துள்ளதாக ஜப்பான் உதைபந்தாட்ட சங்கத்தின் கௌரவத் தலைவர் கோசோ தாஷிமா புதன்கிழமை தெரிவித்தார்.
2027 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி ரபாத்தில் நடைபெறவுள்ள 77வது பீஃபா மாநாட்டில் வாக்குப்பதிவு நடைபெறும். ஜியானி இன்ஃபான்டினோ, உலக உதைபந்தாட்ட ஆளும் அமைப்பின் தலைவராக நான்காவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.
வேட்பாளர்களைப் பரிந்துரைக்க குறைந்தபட்சம் ஐந்து உறுப்பு சங்கங்கள் தேவை. அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு பீஃபா ஒரு கூட்டமைப்பு அல்லது ஒரு தேசிய சங்கத்திற்குள் ஒரு வீரராகவோ அல்லது அதிகாரியாகவோ உதைப்ந்தாட்டத்தில் தீவிரப் பங்காற்றியிருக்க வேண்டும்.
“நவம்பர் 17 ஆம் திகதி தனது கௌரவத் தலைவர் கோசோ தாஷிமாவை பீஃபா -வின் வேட்பாளராகப் பரிந்துரைத்து ஒரு கடிதத்தை பீஃபா -விடம் சமர்ப்பித்தது,” என்று ஜப்பான் உதைபந்தாட்ட சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தாஷிமா முன்னாள் ஜப்பான் சர்வதேச வீரர் , இளைஞர் பயிற்சியாளர் ஆவார். அவர் பீஃபா தலைவர் பதவிக்குப் போட்டியிடும் முதல் ஜப்பானிய வேட்பாளரும் ஆவார். அவர் 2015 முதல் பீஃபா கவுன்சிலில் பணியாற்றி வருகிறார்.
தனக்கு எந்தெந்த சங்கங்களின் பரிந்துரைகள் கிடைத்துள்ளன என்பதை அவர் வெளியிடவில்லை, ஆனால் புதன்கிழமை தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய உதைபந்தாட்ட கூட்டமைப்பின் வருடாந்திர விருது வழங்கும் விழாவில் செய்தியாளர்களிடம், தமக்கு ஆதரவளித்த நாடுகள் எவை என்பதைப் பின்னர் அறிவிப்பதாகக் கூறினார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு வேட்பாளர்கள் முறையான தகுதி மற்றும் நேர்மைச் சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும், பீஃபா -வின் பொதுச் செயலகம், தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்ட வேட்பாளர்கள் குறித்து மாநாட்டிற்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பே உறுப்பு சங்கங்களுக்கு அறிவிக்க வேண்டும்.
சுவிட்ஸர்லாந்தின் முன்னாள் கப்டன் ரமோன் வேகா,பிரெஞ்சு உதைபந்தாட்ட கூட்டமைப்பின் தலைவர் பிலிப் தியாலோ ஆகியோரும் பீஃபா தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

