Saturday, September 19, 2026 9:10 pm
உலக தடகள சம்பியன்ஷிப் போட்டிகளை நைரோபி , மியூனிச் நகரங்கள் நடத்தவுள்ளன. இதில் கென்யாவின் தலைநகரான நைரோபி, ஆப்பிரிக்காவில் முதன்முறையாக இப்போட்டியை நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கள் ,செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்ற தனது 242-வது கூட்டத்தைத் தொடர்ந்து, உலக தடகள கவுன்சில் இந்த இரண்டு நகரங்களையும் தேர்வு செய்தது. 2029-ஆம் ஆண்டிற்கு நைரோபியும், 2031-ஆம் ஆண்டிற்கு மியூனிச்சும் தேர்ந்தெடுக்கப்பட்டன.ஜேர்மனி இப்போட்டியை நடத்துவது இது மூன்றாவது முறையாகும் அதேவேளையில், இலண்டன் , ரோம் ஆகிய நகரங்கள் ஏல முயற்சியில் தோல்வியடைந்தன.
2027-ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஷிப் போட்டியை பீஜிங் நடத்தவுள்ளது; இதன் மூலம் அடுத்த மூன்று போட்டிகளும் மூன்று வெவ்வேறு கண்டங்களில் நடைபெறவுள்ளன.
2027-ஆம் ஆண்டு சம்பியன்ஷிப் போட்டியானது, உலக தடகள அமைப்பின் தலைவராக செபாஸ்டியன் கோ வகிக்கும் 12 ஆண்டுகால பதவிக்காலத்தின் நிறைவையும் குறிக்கும். கோ முதன்முதலில் 2015-இல் பீஜிங்கில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
,

