Tuesday, May 19, 2026 3:55 pm
சென்னை கோட்டையை தொடர்ந்து, டெல்லி நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையிலும்தவெக முதன்முறையாக கால் பதிக்கவுள்ளது.
அதிமுகவின் சி.வி. சண்முகம் தனது நாடாளுமன்ற பதவியை ராஜிநாமா செய்துள்ளதால் காலியாகும் அந்த ஒரு இடத்திற்கு, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட தவெகவின் வேட்பாளரே தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. டெல்லியில் தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், கட்சியின் கொள்கைகளுக்காகவும் கம்பீரமாக ஒலிக்கும் ஒரு வலுவான ஆளுமையை தேர்ந்தெடுக்க முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த டெல்லி பிரதிநிதித்துவத்திற்கான தவெகவின் பட்டியலில், அதிமுகவிலிருந்து விலகி இணைந்த மூத்த அரசியல்வாதி கு.ப. கிருஷ்ணன்,அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் ஆகியோரின் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன.
கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் இந்த இடத்தை கேட்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும், தவெகவை சேர்ந்த ஒருவரையே டெல்லிக்கு அனுப்ப விஜய் விரும்புவதாக தெரிகிறது. அதே நேரத்தில், காலியாக உள்ள திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்தும் ஆலோசனைகள் சூடுபிடித்துள்ளன.

