Wednesday, May 6, 2026 8:18 pm
தமிழ்நாட்டின் 16வது சட்டசபை கலைக்கப்படுவதாக தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன்மூலம் விஜய் முதல்வராகி அவரது தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான நடைமுறை தீவிரமாகி உள்ளது.
தமிழ்நாடு லோக்பவன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ”மே 5 ம் திகதியில் இருந்துதமிழ்நாட்டின் 16வது சட்டசபை கலைக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் புதிதாக வென்றவர்களின் எம்எல்ஏக்களாக பதவியேற்று மாநிலத்தில் புதிய ஆட்சியை கொண்டு வரும் வகையில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் வென்ற எம்எல்ஏக்களின் பெயர் பட்டியல் தேர்தல் ஆணையம் சார்பில் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்டாலின் தேர்தல் தோல்வியால் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார். இதையடுத்து தான் இன்று சட்டசபை கலைக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டசபை இன்று கலைக்கப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

