Saturday, August 15, 2026 6:51 pm
தண்டனைக் காலத்தை முடிப்பதற்கு முன்பே சிறைச் சாலைகளில் இருந்து தப்பி ஓடிய 709 கைதிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என தேசிய தணிக்கை அலுவலகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில் 1,181 கைதிகள் சிறைகளிலிருந்தோ அல்லது சிறைக் காவலில் இருந்தோ தப்பியோடியதாகவும், அவர்களில் 472 பேர் மட்டுமே பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் 22 சிறைகளில் இருந்து 5,083 கைபேசிகள், 4,149 சிம் கார்டுகள் ,2,432 மின்கலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அது வெளிப்படுத்தியுள்ளது.

