Friday, September 25, 2026 6:17 pm
ஊழல் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சமரா சம்பத் தசநாயக்கவின் முன்னாள் தனிச் செயலாளரை, அக்டோபர் 9 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று உத்தரவிட்டார்.
குறிப்பிட்ட மூன்று நிறுவனங்கள் மட்டுமே பாஸ்பேட்டை (phosphate) ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சந்தேகநபர் உதவியதாகவும், இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையிலிருந்து விலகிச் செயல்பட்டதாகவும் லஞ்சம் இஅல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பாஸ்பேட்டை இறக்குமதி செய்வதற்குத் தேவையான உரிமங்களைப் பெற சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உதவியதன் மூலம், 8.1 மில்லியன் ரூபாய் லஞ்சத்தைக் கோரிப் பெற்ற சந்தேகநபர், அந்தப் பணத்தைத் தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டதாகவும் புலனாய்வாளர்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக CIABOC நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

