Friday, October 30, 2026 5:25 pm
கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்கமானது, செப்டம்பர் மாதத்தில் 8.0 சதவீதமாக இருந்த நிலையில், ஒக்டோபர் மாதத்தில் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 8.7 சதவீதமாக இருந்த நிலையில், ஒக்டோபர் மாதத்தில் 8.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேவேளையில், உணவு அல்லாத பொருட்களுக்கான பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 7.7 சதவீதமாக இருந்த நிலையில், ஒக்டோபர் மாதத்தில் 8.0 சதவீதமாக உயர்ந்துள்ளது.

