Tuesday, June 2, 2026 8:23 pm
ஒகினாவாவைத் தாக்கிய பிறகு, ஜாங்மி புயல் செவ்வாயன்று ஜப்பானின் தென்மேற்கில் உள்ள முக்கியத் தீவான கியூஷுவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
செவ்வாயன்று, கியூஷுவிற்குச் செல்லும்,அங்கிருந்து வெளியேறும் 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக அரசாங்கம் கூறியது.
நண்பகல் நிலவரப்படி, இந்தப் பருவத்தின் ஆறாவது புயல், யாகுஷிமா தீவிலிருந்து சுமார் 110 கிலோமீற்றர் மேற்கு-தென்மேற்கில் நிலை கொண்டிருந்ததாகவும், மணிக்கு சுமார் 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததாகவும், மணிக்கு 126 கிலோமீற்றர் வரை வேகத்தில் காற்று வீசியதாகவும் அந்த மையம் தெரிவித்தது.
ககோஷிமா , ஒகினாவா ஆகிய மாகாணங்களில் சுமார் 48,000 வீடுகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தலைமை அமைச்சரவைச் செயலாளர் மினோரு கிஹாரா தெரிவித்தார்.

