Monday, May 4, 2026 9:18 am
: தமிழகமே ஆவலோடு எதிர்பார்த்த 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. இதில் சென்னையின் இதயமாகக் கருதப்படும் ‘சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி’ தொகுதியின் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதே இப்போதைய ஹாட் டாபிக் ஆக இருந்தது. காரணம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் களம் கண்டுள்ளது தான். தபால் வாக்குகள் எண்ணத்தொடங்கியதுமே உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இருக்கிறார்.
இந்த முறை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் சுமார் 2,34,500 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். இதில் இந்த ஆண்டு வாக்குப்பதிவு மிக ஆச்சரியமான வகையில் 78.4% ஆகப் பதிவாகி இருந்தது. கடந்த 2021-ல் வெறும் 58% ஆக இருந்த வாக்குப்பதிவு, இப்போது சுமார் 20% அதிகரித்திருப்பது அரசியல் கட்சிகளுக்குப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் தவெக (விஜய்யின் தமிழக வெற்றி கழகம்) சார்பில் களம் இறங்கியுள்ள செல்வம், அதிமுக சார்பில் போட்டியிடும் ஆதி ராஜாராமும் உதயநிதிக்கு கடும் சவாலாக இருப்பார்கள் எனக் கருதப்பட்டது. ஆதிராஜாராம் தான் கடந்த முறை ஸ்டாலினுக்கு எதிராக களம் கண்டவர்.. தொகுதியில் உள்ள பழைய பாரம்பரிய வாக்குகளைத் தக்கவைக்க அதிமுக மும்முரமாகச் செயல்பட்டிருந்தது. பாஜகவின் கூட்டணி பலம் கைகொடுக்கும் என்று நம்பியது. அதேபோல் விஜய்யின் தவெகவும் இளைஞர்களின் வாக்குகள் தங்கள் பக்கம் திரும்பும் என்று நம்பியது

