Monday, June 15, 2026 11:00 pm
எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முடிந்த இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான மகளிர் ரி உலகக் கிண்ண போட்டியில் இலங்கையை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து 87 ஓட்டங்களால்வென்றது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் பந்து வீசியது முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து 20 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 219 ஓட்டங்கள் எடுத்துக் கொண்டது.
மகளிர் ரிஉலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட அணியொன்று பெற்ற அதிக ஓட்டங்கள் இது வாகும். டானி வியாட்-ஹொட்கே ஆட்டமிழக்காமல் 62 பந்துகளில் 13 பௌண்டரிகள் ,ஒரு சிக்ஸர் அடங்கலாக 105 ஓட்டங்கள் அடித்தார். எமி ஜோன்ஸ் 38 பந்துகளில் 53 ஓட்டங்களையும் நேட் ஸ்கைவர் ஆட்டமிழக்காது 22 பந்துகளில் 46 ஓட்டங்களும் அடித்தனர்.
இலங்கைப் பந்துவீச்சில் மால்கி மாதரா மாத்திரம் ஒரு விக்கெட்டினை சுருட்டியிருந்தார். பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 220 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை வீராங்கனைகள் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 133 ஓட்டங்களுடன் படுதோல்வி அடைந்தனர்.
இலங்கைத் தரப்பில் அதிகபட்சமாக நிலக்ஷி டி சில்வா 39 ஓட்டங்கள் பெற்றார். இங்கிலாந்து பந்துவீச்சு சார்பில் பிரயா கேம்ப் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் சரொல்லேட் டீன் மற்றும் சோபி எக்லஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகியாக டானி வியாட்-ஹொட்கே தெரிவானார்.
இலங்கை மகளிர் அணி இந்த உலகக் கிண்ணத் தொடரில் தமது அடுத்த போட்டியில் தொடரின் நடப்புச் சம்பியன் நியூசிலாந்தை செவ்வாய்க்கிழமை (16) எதிர்கொள்கின்றது.

