Monday, May 11, 2026 8:36 pm
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியின் போது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நடத்தை விதிகளை மீறியதற்காக , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
18வது ஓவரில், ஃபிளவர் நான்காவது நடுவரிடம் ஆக்ரோஷமாகப் பேசியபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இது, “போட்டியின் போது கேட்கும்படி ஆபாச வார்த்தையைப் பயன்படுத்துவது” தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் 2.3வது பிரிவை மீறிய செயலாகும். இதன் காரணமாக அவரது போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
“அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, போட்டி நடுவர் அமித் சர்மா விதித்த தண்டனையையும் ஏற்றுக்கொண்டார்,” என லீக் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

