Friday, November 20, 2026 10:00 pm
சர்வதேச மோசடி வலையமைப்புகள் , இணையவழி மோசடிகள் குறித்து விசாரிப்பதை நோக்கமாகக் கொண்ட, அமெரிக்காவின் கூட்டாட்சி புலனாய்வுப் பணியகம் (FBI ), நீதித்துறை (DOJ) ஆகியவற்றின் அதிகாரிகள், இலங்கைக்கு மேற்கொண்ட ஒரு வார காலப் பயணத்தை நிறைவு செய்துள்ளனர்.
நவம்பர் 16 ஆம் திகதி தொடங்கிய இந்தப் பயணத்தின் போது, அமெரிக்க அதிகாரிகள் சட்டமா அதிபர் திணைக்களம் , இலங்கை பொலிஸ் பிரிவுகளுடன் இணைந்து, நடைபெற்று வரும் இரண்டு மோசடி மைய விசாரணைகளை மீளாய்வு செய்ததுடன், டிஜிட்டல் ஆதாரங்களுக்காக 80-க்கும் மேற்பட்ட மின்னணு சாதனங்களையும் ஆய்வு செய்தனர்.
பன்னாட்டு குற்றவியல் வலையமைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்கான புலனாய்வுப் பயிற்சி, ஆதாரப் பகுப்பாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை இந்த ஒத்துழைப்பில் அடங்கும் என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்திற்குப் பிறகும் கூட்டு விசாரணைகளும் தகவல் பகிர்வு முயற்சிகளும் தொடரும்.

