Sunday, April 19, 2026 6:16 pm
ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கொடி ஏந்திய இரண்டு கப்பல்கள் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்ட ‘கடுமையான சம்பவம்’ குறித்து விவாதிப்பதற்காக, இந்தியாவிற்கான ஈரான் தூதரை இந்திய வெளியுறவு அமைச்சு வரவழைத்தது.
‘நேற்று காலை ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கொடி ஏந்திய இரண்டு கப்பல்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலையை வெளியுறவுச் செயலாளர் தெரிவித்தார்,’ என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தியாவுக்குச் செல்லும் பல கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு ஈரான் முன்னதாக வழிவகை செய்திருந்ததை வெளியுறவு அமைச்சர் நினைவு கூர்ந்தார் என அந்த அறிக்கை தெரிவித்தது.

