Wednesday, May 6, 2026 9:29 am
தமிழகத்தில் ஆஅட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியிடம் விஜய் ஆதரவு கோரியுள்ளார். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‘ராகுல் + விஜய்’ என எழுதி ‘ஃபயர்’ விடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவு வழங்க தயாராகிவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற விஜய் தீவிரமாக முயன்று வருகிறார். நேற்றுவிஜய்யிடம், ராகுல் காந்தி பேசி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவரிடம் நேரடியாக விஜய் ஆதரவு கோரியுள்ளார். இதனை இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் உறுதி செய்தார்.
இந்த பேச்சுவார்த்தை நடுவே தான் பீகார் காங்கிரஸ் கட்சி போட்ட எக்ஸ் பதிவு தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. அந்த பதிவில் Rahul + Vijay பெயரை சேர்த்து ‘ஃபயர்’ விடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு போட்டோ பதிவிடப்பட்டுள்ளது. அதில் ராகுல் காந்தி, விஜய் ஆகியோர் சிரித்தபடி இருக்கின்றனர். மேலும் நேற்று ராகுல் காந்தி போட்ட எக்ஸ் பதிவும், இன்று விஜய் போட்ட எக்ஸ் பதிவும் இணைக்கப்பட்டுள்ளது.

