Saturday, August 29, 2026 2:02 pm
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு ஒன்று, பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு சனிக்கிழமை காலை சென்றது.
ஒரு விசாரணை தொடர்பாக ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு கோரப்பட்ட போதிலும், கருணநாயக்க ஆஜராகாததால் அதிகாரிகள் அவரது இல்லத்திற்குச் சென்றதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுமென்றே இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜராவதைத் தவிர்க்கவில்லை என்று கருணநாயக்கவின் ஊடகக் குழு கூறியது.
பாராளுமன்ற உறுப்பினரின் ஊடகக் குழுவின்படி, ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு கருணநாயக்கவுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தும், அவரால் குறிப்பிட்ட திகதியில் கலந்துகொள்ள முடியவில்லை. எனவே, அவர் ஆஜராவதற்கு மற்றொரு திகதியை அவரது வழக்கறிஞர்கள் கோரியிருந்தனர்.
எதிர்காலத்தில் ஒரு திகதியில் கருணநாயக்க இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜராவார் என்று பாராளுமன்ற உறுப்பினரின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
கருணநாயக்க கொழும்பில் இல்லை என்பதை அறிந்த பின்னர், அதிகாரிகள் அவரது இல்லத்தை விட்டு வெளியேறினர்.

