Thursday, September 24, 2026 5:24 pm
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் உபரி நீர் வெளியேற்றும் கதவுகளில் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை(24) திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கப் பொறியாளர்கள் தெரிவித்தனர்.
கனமழை காரணமாக இன்று அதிகாலை முதலே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்தால், எஞ்சியுள்ள உபரி நீர் வெளியேற்றும் கதவுகளும் தானாகவே திறக்கப்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நீர்த்தேக்கத்திற்குக் கீழ் பகுதியில் கொத்மலை ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

