Thursday, September 24, 2026 5:40 pm
காலி, கண்டி,நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மூன்றாம் நிலை (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI), விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் 1.00 மணி முதல் நாளை சனிக்கிழமை (25) பிற்பகல் 1.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் காலியின் நெலுவ, நியகம, தவலம , நாகொட; கண்டியின் பாஸ்பாகே கோரளை;,நுவரெலியாவின் கொத்மலை மேற்கு, நோர்வூட், கொத்மலை கிழக்கு,அம்பகமுவ ஆகியவை அடங்கும்.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

