Wednesday, June 17, 2026 9:09 pm
மார்ச் மாத தொடக்கத்தில் சண்டை தீவிரமடைந்ததிலிருந்து லெபனானில் 240-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 1,000 பேர் காயமடைந்ததாகவும் யுனிசெஃப் புதன்கிழமை கூறியது. நீடித்த வன்முறை நாட்டின் இளம் தலைமுறையினர் மீது பெருகிவரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் அது எச்சரித்தது.
யுனிசெஃப் வெளியிட்ட அறிக்கையில்,
ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்வு, பாதுகாப்பின்மை ,அடிப்படை சேவைகளுக்கான அணுகல் தடைபடுதல் ஆகியவற்றின் விளைவுகளை எதிர்கொள்கின்றனர்.
வன்முறையின் உணர்ச்சி மற்றும் மன ரீதியான தாக்கத்தால் 770,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகள் பல குடும்பங்கள் தங்கள் சமூகங்களுக்குத் திரும்புவதைத் தொடர்ந்து தடுத்து வருகின்றன.
சண்டைகளை முடிவுக்குக் கொண்டுவரவும், பொதுமக்களையும் முக்கிய உள்கட்டமைப்புகளையும் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட மக்களை மனிதாபிமான அமைப்புகள் தடையின்றிச் சென்றடையவும் யுனிசெஃப் அழைப்பு விடுத்துள்ளது.

