Monday, June 15, 2026 10:50 pm
உலகக் கிண்ண வரலாற்றில், மாற்று வீரர் ஒருவர் அடித்த இரண்டாவது அதிவேக கோலை சுவீடனின் ஸ்வான்பெர்க் அடித்தார்.
27 வயதான அவர், துனிசியாவுக்கு எதிரான 2026 ஃபிஃபா உலகக் கோப்பை ‘F’ பிரிவு ஆட்டத்தின்போது, பயிற்சியாளர் கிரஹாம் பாட்டரால் மாற்று வீரராகக் களமிறக்கப்பட்ட 18 வினாடிகளிலேயே கோல் அடித்தார்.
சுவீடன் ஆட்டத்தை 5-1 என்ற கோல் கணக்கில் வென்றது. அன்றைய தினம் முன்னதாக நெதர்லாந்து ஜப்பானுடன் சமன் செய்ததைத் தொடர்ந்து, இந்த வெற்றியின் மூலம் ஸ்வீடன் மூன்று புள்ளிகளுடன் குழுவில் முதலிடத்தைப் பிடித்தது.
FIFA உலகக் கிண்ண வரலாற்றில் மாற்று வீரர்கள் அடித்த அதிவேக கோல்கள்:
ரிச்சர்ட் மொரேல்ஸ் – 16 வினாடிகள்
Mattias Svanberg – 18 வினாடிகள்
எப்பே சாண்ட் – 21 வினாடிகள்
மார்சின் ஜெவ்லகோவ் – 59 வினாடிகள்
ராண்டல் கோலோ முவானி – 65 வினாடிகள்
ரோஜர் மில்லா – 83 வினாடிகள்
ஆர்டெம் டிஸ்யூபா – 88 வினாடிகள்
மார்கஸ் ராஷ்போர்டு – 91 வினாடிகள்
லெராய் ஃபெர் – 95 வினாடிகள்
ஜூலியன் கிரீன் – 99 வினாடிகள்
மார்கோஸ் உரெனா – 103 வினாடிகள்

