Saturday, November 7, 2026 9:40 am
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (6) பெய்த கனமழையைத் தொடர்ந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்துச் சேவை உட்பட பல பிரிவுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இந்த வெள்ளப்பெருக்கு நோயாளர் வார்டுகள், வெளிநோயாளர் பிரிவு, கதிரியக்கப் பிரிவு ,அறுவை சிகிச்சைப் பிரிவு ஆகியன பாதிக்கப்பட்டன. விபத்துச் சேவையில் உள்ள பல மின்தூக்கிகளும் செயலிழந்ததால், ஊழியர்கள் நோயாளிகளை மற்ற வார்டுகளுக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நொர்ரிஸ் கால்வாயை முறையாக சுத்தம் செய்து பராமரிக்கத் தவறிய கொழும்பு மாநகர சபையின் செயலுற்ற செயலுடன் இச்சம்பவம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
கால்வாயின் ஓரத்தில் அனுமதியற்ற கட்டுமானங்கள் , அருகிலுள்ள வணிக நிறுவனங்களால் கழிவுகளை அகற்றுதல் ஆகியவையும் இதற்குக் காரணமான காரணிகளாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சில மணி நேரங்களுக்குள் கொழும்பில் 129 மி.மீ மழை பதிவானது. மருதானை,பொரளை,பம்பலப்பிட்டி ஆகியனவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

