Sunday, September 20, 2026 1:01 pm
மகாவலி ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மகாவலி ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயர்ந்தால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்.
கெலியோயா, கம்பொலை, நாவலப்பிட்டி , பேராதனை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதேச செயலாளர்கள் , பொலிஸ் அதிகாரிகள் ஆக்கியோரிடம் கோரப்பட்டுள்ளது.
வெள்ளச் சூழலின் தீவிரத்திற்கு ஏற்ப, தேவைப்படும் இடங்களில் மக்களை அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான மையங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டச் செயலாளரின் சார்பில், அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஐ.ஏ.கே. ரணவீரவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

