Sunday, June 28, 2026 7:21 pm
தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு தொகுதி இடைத்தேர்தலில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், அண்ணாமலையும் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெருந்துறை தொகுதியில் அண்ணாமலை போட்டியிட இருப்பதாகவும், இதற்கான தீவிர ஆலோசனையில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விஜய்க்கு இந்த இடைத்தேர்தல் அக்னி பரீட்சையாகவே இருக்கக் கூடும் என்பதில் சந்தேகம் இல்லை என கூறப்படுகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஈரோடு பெருந்துறை தொகுதியில் “வி தி லீடர்ஸ்” அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் விதமாக அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படும் நிலையில், இது பற்றி விரைவில் அண்ணாமலை ஆலோசித்து முடிவு செய்வார் என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

