Thursday, April 16, 2026 1:48 pm
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கப்பலில் இருந்து ஏவப்படும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையின் நேரடி சோதனையை பாகிஸ்தான் கடற்படை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை, நீண்ட தூர இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதாக இராணுவத்தின் ஊடகப் பிரிவு வியாழக்கிழமை தெரிவித்தது.
கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் நவீத் அஷ்ரஃப், மூத்த விஞ்ஞானிகள், பொறியாளர்களுடன் இணைந்து இந்த ஏவுகணைச் சோதனையை நேரில் பார்வையிட்டார்.
அதிநவீன வழிகாட்டு அமைப்பு மற்றும் மேம்பட்ட சூழ்ச்சித் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால், அச்சுறுத்தல்களைத் தவிர்க்கவும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளவும், இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கவும இது உதவுகிறது என்று ஐ.எஸ்.பி.ஆர் (ISPR) தெரிவித்துள்ளது.
“உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணையின் வெற்றிகரமான ஏவுதல், தொழில்நுட்பச் சிறப்பு ,செயல்பாட்டு நிபுணத்துவம் ஆகியவற்றின் இணைப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது,” நம்பகமான கடல்சார் தடுப்பு சக்தியைப் பேணுவதற்கும், பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாகிஸ்தான் கடற்படையின் அர்ப்பணிப்பை இந்தச் சோதனை பிரதிபலிக்கிறது என்றும் அது குறிப்பிட்டது.

