Wednesday, September 23, 2026 2:56 pm
ஏர்பஸ் (Airbus) ஒப்பந்த விவகாரத்தில் தொடர்புபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் காலம் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு மீதான உத்தரவை இன்று நீதிமன்றம் அறிவிப்பதாக இருந்தது. இருப்பினும், பிணை மனு தொடர்பான சில விடயங்களைத் தெளிவுபடுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்ட நீதவான், அது தொடர்பான தகவல்களை செப்டம்பர் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பணித்தார்.அதன் பின்னரே பிணை மனு மீதான உத்தரவை நீதிமன்றம் அறிவிக்கும் என்று நீதவான் தெரிவித்தார்.

