Monday, May 4, 2026 9:08 am
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அங்கே பின்னடைவை சந்தித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடந்து வருகிறது. மாநிலத்தின் மிக முக்கியமான நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் திருச்சி கிழக்கு (தொகுதி எண்: 141) தொகுதியின் முடிவுகளை ஒட்டுமொத்த தமிழகமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவில் இத்தொகுதியில் வரலாறு காணாத வகையில் சுமார் 81.77% வாக்குகள் பதிவாகியுள்ளன.

